விஜய் டிவியில் 'உலக நாயகன்' கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, 'சூப்பர் சிங்கர்' ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் 'விஜய் டிவி' மற்றும் 'ஜீ தமிழ்' மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் செய்யப்பட்டார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் 'கால் சென்டர்' டாஸ்கின் போது சனம் ஷெட்டி, சம்யுக்தாவிற்கு கால் செய்கிறார். அப்போது சம்யுக்தா "வெல்கம் டு பிக் பாஸ் கால் சென்டர்" என்று சொல்ல, அதற்கு சனம் "நான் தான் காலர் டென்ஷனாகாதீங்க" என்று சொல்கிறார்.

 

பின், சம்யுக்தா "டென்ஷன் எங்க மேமம். நீங்க பாக்குறதுக்கு அவ்ளோ அழகா இருந்தாலும், நீங்க வாயைத் திறந்தா கலீஜ் கலீஜா தான் பேசுறீங்க" என்று சொல்கிறார். அதற்கு சனம் "நீ வாயைத் திறந்தாலே கலீஜ்ன்னு சொல்றது நம்ம மைண்ட்ல கலீஜ் அது இருந்தா தான் அது வாயில வரும். கேப்டன்சி டாஸ்க்ல உங்களுக்கு சொந்த புத்தி இல்லை" என்று சொல்கிறார். அதன் பிறகு சம்யுக்தா "மத்தவங்களுக்கு வந்து நான் கேப்டன் ஆனது அவ்ளோ வெறுப்பு இருக்கும்னு நான் expect-ஏ பண்ணல" என்று சொல்கிறார். பின், சனம் "ஏன் என்ன காரணம் இருக்கலாம்?" என்று கேட்கிறார். அதற்கு சம்யுக்தா "அது வந்து அவங்க அவங்களோட வளர்ப்பு" என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

 

Post a Comment

Previous Post Next Post