ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட்க்கு சொந்தமான பேடிஎம் செயலி விதிமீறல் காரணமாக கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டது தற்போது மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

 விளையாட்டு, சூதாட்டத்திற்கு துணைபுரிவதாகக் கூறி கூகுள் நிறுவனம் பேடிஎம் செயலியை தற்காலிகமாக ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்குவதாக தெரிவித்திருந்தது. ஏற்கனவே தரவிறக்கம் செய்து பயன்படுத்துவோருக்கு எந்த பிரச்னையும் வராது எனவும், மேலும் வாடிக்கையாளருடைய பணம் பத்திரமாக இருக்கும் எனவும் பேடிஎம் நிறுவனம் டிவிட்டரில் விளக்கம் கொடுத்திருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் ப்ளே ஸ்டோரில் பேடிஎம் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post