
சர்ஃபேஸ் 10.6'' திரை அளவு 16:9 அகல திரை மற்றும் எச்.டீ (HD) திரை திறனை கொண்டுள்ளது. இந்த அகலத்திரை பயனாளர்களுக்கு ஒரு புதிய இனிய அனுபவத்தை அளிப்பது உறுதி. இந்த திரை வெளிச்சம் நமது சுற்றுப்புறத்திற்கு ஏற்ப மாறும் தன்மை உடையது. அதாவது தானாகவே தேவைப்பட்ட வெளிச்ச அளவுகளை கூட்டும் அல்லது தேவைக்கேற்ப வெளிச்சத்தை குறைக்கும். இதில் நாம் மைக்ரோ எஸ்.டி (Micro SD) மெமரி கார்ட்டை (Memory Card) பொருத்திக் கொள்ளவும் வசதியுள்ளது.

சில வேலைகளுக்கு தட்டச்சு விசை தேவைப்படும். இந்த சர்ஃபேஸ் டேப்லெட் 3 மி.மீ. தடிமன் மட்டுமே கொண்ட உறை போன்ற வடிவமைப்புடன் வருகிறது. இந்த உறையை நாம் தட்டச்சு விசை மற்றும் சுட்டி நகர்த்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த உறை சர்ஃபேஸ் டேப்லெட்டுடன் காந்த உதவியுடன் ஒட்டிக் கொள்ளும். இந்த உறை 5 கண்கவர் வண்ணங்களில் நமக்கு கிடைக்கும்.

சர்ஃபேஸில் 2 புகைப்படக் கருவி இணைக்கப்பட்டுள்ளது. அதாவது முன்புறம் வெப்கேம் (Webcam) போல நமது முகத்தை மற்றொருவருக்கு காட்டும். பின்புறம் உள்ள கேமரா மூலம் நமக்கு தேவையானவற்றை நாம் புகைப்படமாக பதிவு செய்யலாம். இருமுனை ஒலிபெருக்கி சிறந்த ஒலியை நமக்கு அளிக்கும்.
إرسال تعليق