ஒன்பிளஸ் 9 தொடர் ஸ்மார்ட்போன்கள் இந்தாண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒன்பிளஸ் 9 சீரிஸ்-ல் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9 லைட் அல்லது ஒன்பிளஸ் 9இ மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மற்றொரு மலிவு வலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 9இ ஸ்மார்ட்போன்கள் முக்கிய சிறப்பம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஒன்பிளஸ் 9 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து லீக்கான விவரங்களை பார்க்கலாம். டெக்மேனியாவின் கசிவுப்படி ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத அமோலெட் டிஸ்ப்ளே, 1440 x 3216 பிக்சல் தீர்மானம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 888 SoC சிப்செட் உள்ளிட்டவைகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. அதோடு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்பு வசதி, 4500 எம்ஏஎச் பேட்டரி ஆகியவை இருக்கும் எனவும் 65 வார்ட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ கேமரா அம்சங்களை பொருத்தவரையில் இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 64 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா உட்பட மூன்று கேமராக்கள் இருக்கும் என கசிந்த தகவல் கூறுகிறது.

ஒன்பிளஸ் 9இ அல்லது ஒன்பிளஸ் 9 லைட் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் ஆகியவற்றுடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி, 8ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்புடன் வரும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 இ அல்லது ஒன்ப்ளஸ் 9 லைட் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா என இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post