டிசம்பர் மாதத்துக்குள் 10 கோடி எண்ணிக்கையில் குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

ஆண்ட்ராய்டு இயங்கு தளம் கொண்ட இந்த போன்கள், டேட்டா பேக் இணைப்புடன் வழங்கப்படும் என்றும், இந்த ஆண்டு இறுதியில், அல்லது வரும் ஆண்டு தொடக்கத்தில் கொண்டு வர உள்ளதாகவும் தெரிய வருகிறது.

 

கடந்த ஜூலை மாதம் நடைபெற ரிலையன்ஸ் ஆண்டுக் கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, குறைந்த விலையில் 4 ஜி அல்லது 5 ஜி வசதி கொண்ட போன்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பித்தக்கது.

 

இதற்கிடையே ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் சுமார் 33 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

Post a Comment

أحدث أقدم