ZOOM செயலிக்கு பதில் 'JioMeet' டை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாகவும் மேலும் அதில் பாதுகாப்பின்மை காரணமாகவும் zoom செயலியை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் தான் zoom செயலிக்கு மாற்றாக 'JioMeet' என்ற செயலியை ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் ஆகிய சேவைகளைப் போல JioMeet செயலி மூலமாக எச்டி தரத்திலான வீடியோ அழைப்புகளையும் ஏற்க முடியும். zoom செயலி போல இதில் 40 நிமிடம் மட்டும் நீட்டிக்க முடியும் என்கிற நேர வரம்பு இல்லை. 24 மணிநேரமும் நாம் வீடியோ அழைப்புகளை நீட்டிக்கலாம்.JioMeet மூலம் மேற்கொள்ளப்படுகின்ற அனைதது டிஜிட்டல் சந்திப்புகளுக்கும் பாஸ்வேர்டு மற்றும் என்கிரிப்சன் மூலம் பயனார்களின் பாதுகாப்பு ஆனது உறுதி செய்யப்படும் என அதன் இணையதளத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறு ஜியோ மீட் பதவிறக்கம் செய்யலாம்??! JioMeetடை, கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இது லட்சம் பதிவிறக்கங்களை கடந்து விட்ட நிலையில். JioMeet மூலம் 'மேட் இன் இந்தியா' என்ற ஹேஷ்டேக் ஆனது நேற்று சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலானது. ஃபேஸ்புக் மற்றும் இன்டெல் நிறுவனங்களில் முதலீட்டைத் தொடர்ந்து இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் டிஜிட்டல் சாம்ராஜியத்தை தற்போது விரிவுபடுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Download JioMeet

Post a Comment

Previous Post Next Post