தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பணம் நேரடியாக வீடுகளில் விநியோகிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்களோடு ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜூன் 19 முதல் 30 வரை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினையை சந்திக்காமல் இருக்க ஊரடங்கு செயல்படுத்தப்படும் மாவட்டங்களில் குடும்பத்திற்கு ரூ.1000 நிவாரண தொகையாக அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிவாரண தொகையை ஜூன் 22ம் தேதி முதல் நேரடியாக வீடுகளுக்கு சென்றே விநியோகிக்க உள்ளதாகவும், மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post