பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பட்டியலிலிருந்து நான்கு திட்டங்களை அகற்றிய பின்பு, தற்பொழுது பிஎஸ்என்எல் தனது மேடையில் அதிகமான பயனர்களைக் கவரும் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பிராட்பேண்ட் பிளேயர் இப்போது அதன் சந்தாதாரர்களுக்கு நான்கு மாதங்கள் வரை இலவச சேவையை அதன் நான்கு புதிய திட்டத்தின் மூலம் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் புதிய பிராட்பேண்ட் திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பிராட்பேண்ட் சேவைகளைப் பஞ்சாப், கொல்கத்தா, லடாக், நாகாலாந்து, ஒடிசா, மிசோரம், மாதப் பிரதேசம், சென்னை மற்றும் நாட்டின் பல இடங்களில் கிடைக்கும்படி வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த 4 மாத இலவச சேவை 36 மாதத் திட்டத்துடன் கிடைக்கிறது. பிஎஸ்என்எல் 36 மாத பாரத் பைபர் பிராட்பேண்ட் காம்போ திட்டத்தின் கீழ் 4 திட்டங்களைக் கொண்டுள்ளது.
3 மாதம் இலவச சேவை மற்றும் 1 மாத இலவச சேவை திட்டங்கள்
தமிழ்நாடு வட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனம், பிராட்பேண்ட் காம்போ திட்டத்தின் கீழ் 4 மாத இலவச நன்மை வழங்கும் திட்டங்களைப் போல, பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 24 மாத திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பயனர்களுக்குக் கூடுதலாக 3 மாதம் இலவச சேவை வழங்கப்படுகிறது. அதேபோல், 12 மாத கால திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு, கூடுதலாக 1 மாத கால இலவச நன்மை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தடையின்றி 4 மாதம் வரை இலவசம்
இந்த பிரிவின் கீழ் கிடைக்கும் திட்டங்களைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் வரம்பற்ற தரவு நன்மையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்குகின்றது. இந்த அனைத்து நன்மைகளும் 36 மாத கால நன்மையுடன் கூடுதலாக மேலும் நான்கு மாதங்களுக்கு உங்களுக்குத் தடையின்றி இலவசமாகக் கிடைக்கும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்பை எவ்வாறு பயன்படுத்துவது
இந்த சலுகையைப் பார்த்த பிறகு, நீங்கள் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பிராட்பேண்ட் சேவைகளுக்கு மாற திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் இதைப் பின்பற்றுங்கள். பிஎஸ்என்எல் லேண்ட்லைன் / விங்ஸ் பிராட்பேண்ட் இணைப்பை எவ்வாறு பயன்படுத்துவது

செயல்முறை 1
முதலில், நீங்கள் பிஎஸ்என்எல் வலைத்தளத்தைச் சென்று பார்க்க வேண்டும்.
பின்னர், மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி மற்றும் உங்கள் மாநிலத் தகவல்களை நீங்கள் பதிவிட வேண்டும்.
அதன் பிறகு, உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP எண் அனுப்பப்படும்.
பின்னர், நீங்கள் பயன்படுத்த விரும்பும் சேவைகளான லேண்ட்லைன், பிராட்பேண்ட், எஃப்டிடிஎச், விங்ஸ் போன்றவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

செயல்முறை 2
அதனைத் தொடர்ந்து, முகவரி ஆதாரம், அடையாள அட்டை மற்றும் புகைப்படங்கள் போன்ற உங்கள் வாடிக்கையாளர் ஆவணங்களைஅப்டேட் செய்ய வேண்டும்.
பின்னர், திரையில் அவரும் விண்ணப்பப் படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும்.
பின்னர் சப்மிட் பட்டனை கிளிக் செய்துவிட்டால் வேலை முடிந்துவிடும்.
இறுதியாக, உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் பிஎஸ்என்எல் ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கவும். விலை விபரங்களை மற்றும் நன்மைகள் பற்றிய விரிவான தகவலை அறிய BSNL - https://www.bsnl.co.in அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகுங்கள்.

Post a Comment

Previous Post Next Post