
நடிகை கீர்த்தி பாண்டியன், 2019 ஆம் ஆண்டு வெளியான தும்பா படம் மூலம் சினிமாவில் கால் பதித்தார், கலை வாரிசு என்பதால் இவருக்கு முதல் படத்திலேயே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
One of the most grateful things I have ever done! Learning the craft, one step at a time ♥️
Had to pull in Driya baby for this one 👩🏽🌾
One of the most grateful things I have ever done! Learning the craft, one step at a time ♥️— Keerthi Pandian (@ikeerthipandian) May 5, 2020
Had to pull in Driya baby for this one 👩🏽🌾
#niece #quarantine #farming
📸 Appa @iarunpandianc (Again, this is within our quarantine gated home property, it is not a public area) pic.twitter.com/OxwNBXdz9J
Keerthi Pandian (@ikeerthipandian)
முதல் படத்தில் கிடைத்த வெற்றியால் தற்போது மற்றுமொரு தமிழ்ப் படத்தில் நடிக்கும் வாய்ப்பினையும் கீர்த்தி பெற்றார். மலையாளத்தில் மாஸ் ஹிட்டான ஹெலன் படத்தின் ரீமேக்கில் தந்தை அருண் பாண்டியனுடன் இணைந்து நடிக்கிறார். ஊரடங்கு முடிந்த பின்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகின்றது.
ஊரடங்கு காலத்தில் நடிகர், நடிகைகள் ஏதாவது ஒரு விதத்தில் பொழுது போக்கி, அதனை வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்தவகையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், கீர்த்தி பாண்டியன் பொது இடத்தினை உழுது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
இந்தநிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வயலில் நாத்து நடவு செய்கிறார். மேலும் அவர் அந்தப் பதிவில், "என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன். இந்த கலையை கற்றிருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
Post a Comment