கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்து வருகிறது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் வரிசையில் அமெரிக்கா , ஸ்பெயின் , இத்தாலி , இங்கிலாந்து , பிரான்ஸ் , ஜெர்மனி , ஈரான் , பிரேசில் , என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அரசுக்கு ஒத்துழைக்கும் விதமாக போலி செய்திகளை தடுக்க டிக்டாக் நிறுவனம் சிறப்பு அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா குறித்து பல்வேறு போலி தகவல்கள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.
அதை தடுப்பதற்கு சமூகவலைதள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் டிக்டாக் நிறுவனம் தவறாக வழிநடத்தும் தகவல் அதாவது misleading information என்ற தலைப்பில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

கோவிட் 19 குறித்த தவறான தகவல்களைப் புகாரளிக்க மட்டுமல்லாமல் பிற தலைப்புகள் குறித்தும் புகாரளிக்க பயனர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். பகிர்> அறிக்கை> தவறான தகவல்> கோவிட் -19 தவறான தகவல்> சமர்ப்பி (Share > Report > Misleading Information > Covid-19 misinformation > Submit). இந்த வழிமுறையின்படி தவறான தகவல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post