சென்னையில் கடந்த ஒரு வாரமாக தினமும் சராசரியாக 500க்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசையும் கொரோனா பாதித்துள்ளது. 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெளியே வரும்போது முக கவசம் போட வேண்டும் என்ற விதியை ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்தது. ஆனால் பொதுமக்கள் கண்டுகொள்ளாமல் சர்வசாதாரணமாக மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிகின்றனர். இதனால் அலட்சியமாக இருக்கும் மக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் நடந்து செல்லும் நபருக்கு ரூ.100 அபராதமும், வாகனங்களில் செல்லும் நபருக்கு 500 அபராதம் விதிக்கப்படும், என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை மக்கள் யாரும் முறையாக பின்பற்றாமல் சர்வ சாதாரணமாக வெளியில் திரிந்து வருகின்றனர்.

Post a Comment

أحدث أقدم