ஊபர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட சுமார் 3500 பணியாளர்களை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர், அவர்களுக்கு இன்றே கடைசி பணி நாள் என வேலையிழக்கும் செய்தியை தெரிவித்துள்ளார்.

ஊபர் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர் "ரபின் சாவ்லேவ்" தனது ஊழியர்களுடன் வீடியோ காலில் உரையாடிய போது, 3700 பேரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளார். இது குறித்து "டெய்லி மெயில்"வெளியிட்ட செய்தியில், வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட 14 சதவீத பணியாளர்கள் அதாவது 3700 பேரை நீக்கியுள்ளதாக ரபின் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனது பணியாளர்களுடன் வீடியோ காலில் இணைந்த ரபின், அவர்களிடம், 'கொரோனா காரணமாக வணிகம் இப்போதே பாதியளவு குறைந்துள்ளது. கடினமான மற்றும் துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், பல முன்னணி வாடிக்கையாளர் சேவை பணியாளர்களுக்கு வேலை இல்லை. இதன் விளைவாக, 3,700 பேரை நீக்குகிறோம்.

உங்கள் பணி மிகச் சிறப்பாக இருந்திருந்தாலும், இன்றே உங்களது கடைசி பணி நாள். வேலையிழக்கும் ஊழியர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியான அறிவிப்பாக இருக்கும் என்பதை நான் உணர்கிறேன்,' எனக் கூறியவாறு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளார்.

வெறும் 3 நிமிட வீடியோ காலில் 3700 பேர் வேலையிழந்த செய்தியை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நிறுவனத்தின் இந்த நடவடிக்கைக்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முன்னறிவிப்பு இன்றி, ஒரே நாளில் வேலையை விட்டு நீக்குவது சரியான நடவடிக்கை அல்ல என அவர்கள் குற்றம் சாட்டினர்.

Post a Comment

أحدث أقدم