பெங்களூரு : கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, பரிசோதனை பணியில் ரோபோக்களை ஈடுபடுத்தியுள்ளது.கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோயை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. கர்நாடகாவில் பெங்களூரு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்வதற்காக மருத்துவமனை வாசலில் 2 ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மித்ரா என பெயரிடப்பட்ட இந்த ரோபோக்கள் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற பல்வேறு பரிசோதனைகளை செய்யும். உடல் வெப்பநிலையை கண்டறியும். இதனால் கொரோனா பணியாளர்களுக்கு நோய் தொற்று பரவுவது தடுக்கப்படும். மருத்துவமனைக்கு வரும் சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் போன்றவர்களையும் ரோபோக்கள் பரிசோதிக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

أحدث أقدم