ஆன்ராயிடு மற்றும் ஐபோன் ஸ்மார்ட் பாவனையாளர்களுக்கு மிக முக்கியமானதொரு பதிவுடன் இன்று உங்களை சந்திக்கிறேன். இன்று சந்தைக்கு அறிமுகமாகும் ஸ்மார்ட் போன்கள் பல்வேறு பயனுள்ள வசதிகளுடன் அறிமுகமாகி எமக்கு நன்மையான பல விடயங்களை தருகின்ற அதே வேலை தீமையான ஒரு சில  விடயங்களையும் தர தவறியதில்லை.

ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு சிறப்பு செயலிகள் என்று நம்பமுடியாத பல வேலைகளை செய்து முடிக்கும் வல்லைமை கொண்ட ஸ்மார்ட் போன் செயலிகள் இன்று அறிமுகமாகி விட்டது.

அந்த வகையில் எமது தளத்தில் அண்மையில் எழுதப்பட்ட, 'ஒருவரின் போன் கேமரா-வை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை பார்ப்பது எப்படி?' என்ற பதிவை குறிப்பிடலாம்.

இந்த பதிவை நீங்கள் வாசிக்க தவறி இருந்தால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று வாசித்து தெரிந்து கொள்ள முடியும்.

ஒருவருடைய போன் கேமராவை அவருக்கே தெரியாமல் திறந்து அங்கே நடப்பவற்றை எமது போனில் இருந்து பார்ப்பது எப்படி?

ஆகவே இன்றைய பதிவிலும் இதே மாதிரியான, இதை விட பல மடங்கு வசதிகள் கொண்ட அதிபயங்கர ஆன்ராயிடு மற்றும் ஐபோனுக்கான ஸ்பை செயலி ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

இந்த ஸ்பை செயலி மூலம் நீங்கள் ஸ்பை செய்ய நினைக்கும் ஒருவரின் ஒட்டு மொத்த போன் விபரத்தையே தெரிந்து கொள்ள முடியும். அதாவது குறித்த நபருடைய வாட்ஸ்அப், வைபர் மெசேஜ், போனில் இருக்கும் போட்டோ-கள், எஸ்.எம்.எஸ், போனில் இருக்கும் தொலைபேசி இலக்கங்கள், ஈமெயில் என்று ஒரு போனில் இருக்கும் அனைத்து விடயங்களையும் மிக இலகுவாக உங்களது போன் அல்லது கணனியில் இருந்தபடி பார்த்து கொள்ள முடியும்.


ஆச்சிரியமாக உள்ளதா? ஆம் இவை அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் ஆன்ராயிடு மற்றும் ஐபோன்-களில் செய்து முடிக்கலாம்.

குறிப்பு


இந்த செயலியை ஆன்ராயிடு போனில் பயன்படுத்த குறித்த போன் கட்டாயமாக ரூட் செய்யப்பட்டிருக்க தேவையில்லை. ஆனால் எமது தளத்தினூடாக இந்த செயலியை பயன்படுத்திய சிலர், தங்களால் இந்த செயலியை போனில் இன்ஸ்டால் செய்ய முடியவில்லை என்று கூறி இருந்தார்கள். ஆனால் என்னுடைய ரூட் செய்யப்பட்ட ஆன்ராயிடு போனில் இந்த செயலி எது விதமான பிரச்சினையும் இன்றி இன்ஸ்டால் ஆனது. ஆகவே உங்களது போனை ரூட் செய்ய வேண்டும் என்றால் கீழே வழங்கப்பட்டிருக்கும் லின்க்கில் சென்று உங்களது போனை ரூட் செய்து கொள்ளுங்கள்.

ஆன்ராயிடு ரூட் பற்றி அனைத்தும்.. - சிறப்பு பதிவு

மேலும் இந்த செயலியை உங்களது போனுக்கு தரவிறக்கும் போது சில வேலை உங்களது போனில் இருக்கும் வைரஸ் எதிர்ப்பு செயலியால் இந்த ஸ்பை அப்-இல் வைரஸ் இருப்பதாக காட்டலாம். இது சாதாரணமான விடயம்..! ஏனெனில் இது ஒரு போனை வேவு பார்க்கும் ஸ்பை செயலி. ஆகவே இது ஒரு வைரஸ் அப் ஆகவே வைரஸ் எதிர்ப்பு செயலிகளால் காட்டப்படும்.

மேலும் இந்த செயலி போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருப்பது செட்டிங்க்ஸ் ஆப்ஸ் மெனு-விலே அல்லது வேறு எங்குமோ காட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபடியும் இந்த செயலியை குறித்த போனில் திறக்க வேண்டும் என்றால், டயல் பேட்-இல் #8888* என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் மட்டுமே திறக்க முடியும்.

வேவு பார்க்க கூடிய செயலி என்பதால் இந்த ஸ்பை ஆப் கூகுள் ப்லே ஸ்டோரிலே அல்லது ஆப்பிள் ஸ்டோரிலே கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி..! இந்த ஸ்பை செயலி மூலம் எப்படி ஒரு போனை வேவு பார்ப்பது என்று விளக்கமாக பார்ப்போம்.
(உதாரணமாக ஆன்ராயிடு போனில் இருந்து வேவு பார்ப்பது எப்படி என்று காட்டுகிறேன்.)

முதலாவதாக கீலே தறப்பட்டிருக்கும் ஆன்ராயிடு ஸ்பை செயலியை, நீங்கள் வேவு பார்க்க நினைக்கும் ஸ்மார்ட் போனுக்கு பெற்றுக்கொள்ளுங்கள்.


அடுத்து இந்த செயலியை குறித்த ஸ்மார்ட் போனில் ஆரம்பித்து உங்களது மின்னஞ்சல் கணக்கு விபரங்களை வழங்கி கணக்கொன்றை ஆரம்பித்து கொள்ளுங்கள்.

அதன் பின் Configuration என்று இருப்பதை கிளிக் செய்து, நீங்கள் ஸ்பை செய்ய நினைக்கும் விடயங்களை தெரிவு செய்து Accept என்பதை கிளிக் செய்யுங்கள்.


அதே போல் ஐபோனுக்கான ஸ்பை செயலியை தரவிறக்க 'ஹலோ ஸ்பை'-இன் அதிகாரபூர்வ தளத்தில் சென்று தரவிறக்கி கொள்ள முடியும். (உங்களது ஐபோன் ஜெயில் ப்ரேக் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.)

இப்போது குறித்த நபரின் போனில் நிறுவப்பட்ட ஸ்பை செயலி மூலம் அவரது போன் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டுமென்றால், கீழே படத்தில் காட்டப்பட்டிருக்கும் தளத்திற்கு சென்று, அங்கே நீங்கள் ஏற்கனவே (குறித்த நபரின் போனில்) உருவாக்கிய கணக்கு மூலம் லொகின் செய்யுங்கள்.

இப்போது குறித்த நபரின் போனில் இருக்கும் அனைத்து விடயங்களையும் உங்களால் பார்க்க கூடியதாய் இருக்கும்.


கவலையான விடயம் என்னவென்றால் இது ஒரு பணம் செலுத்தி பயன்படுத்த வேண்டிய ஒரு செயலியாகும். 2 நாட்களுக்கு மட்டுமே இந்த செயலியின் முழு பயனை நாம் இலவசமாக பயன்படுத்த முடியும்.

ஆனால் குறித்த 2 நாட்களுக்குள் நாம் ஸ்பை செய்ய நினைக்கும் ஸ்மார்ட் போன் ஒரு முறை இன்டர்நெட் உடன் இணைந்தாலே போதும். அவர்களுடைய போனில் இருக்கும் அனைத்தும் குறித்த தளத்திற்கு சின்க் செய்யப்பட்டு விடும். ஆகவே மிக இலகுவாக நாம் அவர்களின் போனில் இருக்கும் அனைத்து விடயங்களையும் 2 நாட்களுக்குள் பார்த்து விட முடியும்.

தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள். இந்த செயலியின் இலவச பதிப்பை மிக விரைவில் தர முயற்சிக்கிறேன்.

Post a Comment

أحدث أقدم