சீன  நாட்டினை சேர்ந்த சியோமி நிறுவனம்   ஆறு மாதங்களுக்கு முன்பு Xiaomi Redmi Note 3  சாதனத்தினை தயாரித்து வழங்கியதனை அடுத்து தற்போது Xiaomi Redmi Note 4-யினை அறிமுகப்படுத்தியது.   Xiaomi Redmi Note 3  சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் பெரும் விற்பனையை ஈட்டி தந்தது குறிப்பிடத்தக்கது . அதே போலவே   Xiaomi Redmi Note 4 யும் அதீத விற்பனையை ஈட்டும் என எதிர்பார்த்துள்ளனர்.



Xiaomi Redmi Note 4 ல் அடங்கியுள்ள மிக முக்கிய சிறப்பு அம்சங்கள்:
    •     இந்த ஸ்மார்ட்போன்    deca-core MediaTek helio  X20  ப்ராசசர் மூலம் இயங்குகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய  16/64GB உள்ளடங்கியசேமிப்பு உடன் வருகிறது.
    • Redmi Note 4   ஸ்மார்ட்போனில் MIUI 8 யினை அடிப்படையாக கொண்ட  ஆண்ட்ராய்டு 6.0  Marshmallow  மூலம் இயக்கப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 13MP மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும்   5MP முன் எதிர்கொள்ளும்  கேமராவினையும் கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 401ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080×1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.5   இன்ச்   டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. 
    • ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக  4G LTE, GPRS, 3G, 2G, GPS/A-GPS, ப்ளூடூத் ,     மைக்ரோ-யூஎஸ்பி , ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்  ஆகியவை வழங்குகிறது.
    •  இதில் 151×76.8×8.35mmபரிமாணங்கள் மற்றும் 175கிராம் எடையுடையது. இந்த கைப்பேசியில் 4100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. 
    •  இது கோல்ட் , சில்வர் மற்றும்  கிரே  ஆகிய மூன்று வண்ண வகைகளில் வருகிறது.
    •  இந்த சாதனம் இரண்டு பதிப்புகளில் விற்பனைக்கு கிடைக்கிறது.   அதாவது  16 ஜிபி சேமிப்பு  கொண்ட மாடலின் விலை  சுமார் ரூ 9,000 எனவும் 64GBக்கான கொண்ட மாடலின் விலை சுமார்   ரூ 12,000 எனவும் நிர்ணயித்துள்ளனர். மிகவும் மலிவான விலை கொண்ட இவ்விரு மாடல்களின் விற்பனை  26 முதல்  துவங்கும் என நிர்ணயித்துள்ளனர்.  

Post a Comment

Previous Post Next Post