நீங்கள் பார்த்துயிருப்பிங்க, நம்ம கணினியில் ஏதேனும் ஓர் பைலின் மீது நம் மைவுஸ் கர்சரை வைத்து ரைட் கிளிக் மேற்க்கொள்ளும் போது தோன்றும் மெனுவில் Send To என்னும் ஓர் ஆப்சன் தோன்றும், இதில்Compressed(zipped)FolderMy Documents,Desktop,Mail Box என்னும் நான்கு ஆப்சன் தான் தோன்றும்.

     இது எதற்கு என்றால் நாம் ஓர் பைலை காப்பி செய்யும் போது மிக எளிமையாக மேற்க்கொள்ளவே....தாங்கள் ஓர் பைலின் மீது ரைட் கிளிக் செய்து SEND TOவில்Desktop என்பதை தேர்வு செய்தால் அந்த பைல் Desktopக்கிற்கு சென்றுவிடும்.

     அது சரி..நான் என்ன வேற ஏதோ தலைப்பை போட்டுட்டு இதை சொல்லிட்டு இருக்கினேன் நினைகிறது புரியுது... அதை பத்தி தான் சொல்ல போறேன், அனைவரது கணினியிலும் இந்த மெனுவில் இந்த நான்கு முறைகள் தான் இருக்கும் அதாவது Compressed(zipped)FolderMy Documents,Desktop,Mail Box இவை. இவற்றில் மேலும் தங்களுக்கு விருப்பமான போல்டர் அல்லது டிரைவுகளை வைப்பது எப்படி..

     இதற்கு முதலில் தாங்கள் Start----Run செல்லுங்கள். தற்போது RUN பாக்ஸில்sendto என டைப் செய்து பின்னர், OK என தாருங்கள்.
தற்போது SEND TOகான விண்டோ திரையில் தோன்றியிருக்கும். இனி தாங்கள் மேற்கொள்ள போகும் காரியம் தான் முக்கியம்...இதில் தங்களுக்கு எந்த போல்டர் அல்லது டிரைவின் மெனு SEND TOவில் தோன்ற வேண்டுமோ அதை கிளிக் செய்யுங்கள். உதரணமாக நான் நம் பிளாக்கிற்கான Ungalweb என்னும் போல்டரை அதிகம் முறை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதனால் நான் போல்டரை SEND TOயில் வைக்க போகிறேன்.

     அதற்கு முதலில் நான் Ungalweb போல்டர் இருக்கும் போல்டருக்கு அல்லது டிரைவுக்கு செல்ல வேண்டும். பின்னர் Ungalwebபோல்டர் மீது மைவுஸினால் ரைட் கிளிக் செய்தி காப்பி என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.
பின்னர் SEND TO விண்டோவிற்கு வந்து ரைட்கிளிக் செய்து PASTE SHORTCUTஎன்று தர வேண்டும்.
 இவ்வாறு தாங்களும் மேற்கொண்டால் நான் கூறிய அருமையான சேவை நடைபெறும். தற்போது படத்தில் தாங்கள் காணலாம்...இந்த செயலை மேற்கொண்ட பின்னர்.. 
 நான் ஏதேனும் ஓர் பைலின் மீது ரைட் கிளிக் செய்து SEND TO சென்றால் தோன்றும் சிறிய விண்டோவில் தற்போது புதியதாக Ungalweb தெரிகிறது...

     இதை போல் தாங்களும் முயன்று பாருங்கள்...மிகவும் பயன்யுள்ளதாக இருக்கும்..இந்த பதிவு தங்களுக்கு பிடித்து, பயன்யுள்ளதாக இருந்தால் கண்டிபாக தங்கள் கருத்து மற்றும் வாக்குகளை இடுங்கள்..

Post a Comment

Previous Post Next Post