மஞ்சணத்தின்னா என்னன்னு தெரியுமா உங்களுக்கு? கே‌ள்வி கேட்டா பல பேருக்கு பிடிக்காது. சரி நான் நேரடியா விஷயத்துக்கு வர்றேன். மஞ்சணத்தியோட இன்னொரு பெயர் நுணா. கிராமப்புறங்க‌ள்ல வாழுற மக்களுக்கு இது தெரிஞ்சிருக்கலாம். நான் சின்ன வயசுல இந்த மஞ்சணத்தி மரத்துல ஏறி விளையாடுவோம். அதுல விளையுற காயை பறிச்சி ஒருத்தர் மேல ஒருத்தர் எறிஞ்சி விளையாடுவோம். அது பழமாயிட்டா கருப்பு நிறத்துல இருக்கும். நிறம் மட்டுமில்ல அதில இருந்து ஒருவித நாற்றம் வரும். எங்க ஊர்ல அதை கோழிப்பீ பழம்னு சொல்வோம்.

கோழியோட கழிவு மாதிரி இருக்கும், நாற்றமும்கூட அப்பிடித்தான் இருக்கும். அப்பிடி இருந்தாக்கூட நாங்க அதை சாப்பிடுவோம். கொஞ்சம
புளிப்பு, கொஞ்சம் இனிப்பு சுவை இருக்கும். ஆனா இப்போ யார் அதை சீண்டுறாங்க, மரமே இல்லைங்கிறபோது காயா? பழமா? நுணாக்காயை ஊறுகா‌ய் செஞ்சி சாப்பிட்டா பொதுவா எல்லா நோயும் நீங்கி உடம்பு பலம் பெறும். நுணா இலைச்சாறு ஒரு பங்கு, உத்தாமணினு சொல்ற வேலிப்பருத்தி, நொச்சி, பொடுதலஇதுகளோட சாறு ஒரு பங்கு சேர்த்து 3, 4 வேளை கொடுத்துட்டு வந்தா எல்லாவிதமான மாந்தமும் ஓடிப்போயிரும்.

நுணாக்கா‌ய் & உப்பு சம அளவு எடுத்து அரைச்சி அடை மாதிரி தட்டி காய வச்சி அரைச்சு வச்சிக்கோங்க. இதை வச்சி பல் விளக்கிட்டு வந்தா பல
பளிச்சினு இருக்கும். கூடவே பல்வலி, பல் அரணை வீக்கம், ரத்தக்கசிவு எல்லாம் ஓடிப்போயிரும். இதைவிட வேற பல்பொடி, பேஸ்ட் வேணுமா? நெல்லிக்காயை வெறுமனே சாப்பிடுறது உண்டு. இன்னும் சிலபேர் ஜூஸாக்கியோ, ஊறுகா‌ய் செஞ்சோ சாப்பிடுவோம். ஆன
துவையல் செஞ்சி சாப்பிடுறது அவ்வளவா இல்லை. துவையல் செஞ்சி சாப்பிட்டீங்கனா நாக்கு சுவையில்லாம இருந்தா சரியாயிரும். வாந்தி எடுக்குறது நின்னுரும். அதேபோல நெல்லிமு‌ள்ளியை (இது கா‌ய்ந்த நெல்லிக்கா‌ய்; நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) தண்ணிவிட்டு கொதிக்க வச்சி சாப்பிட்டீங்கன்னா மயக்கம், தாகம் எல்லாம் சரியாகும்.

நெல்லிச்சாறோட கசகசா, பால், சீனி (சர்க்கரை) சேர்த்தசாப்பிட்டீங்கனா பேதி, மூலம் எல்லாம் சரியாகிடும். பொண்ணுங்க சிலபேர் மேகநோயால அவதிப்படுவாங்க. அப்பிடிப்பட்டவங்க சுத்தமான பதநீரை 40 நா‌ள் காலை நேரத்துல குடிச்சிட்டு வந்தா நல்ல சொகம் கெடைக்கும். பனங்கிழங்கை நல்லா வேகவச்சி அதோட தோலையும், உ‌ள்ளே இருக்குற முளையையும் எடுத்துட்டு சின்ன சின்னதா துண்டாக்கி வெயில்ல காய வைக்கணும். அதுக்கு அப்புறமா அதை இடிச்சி மாவாக்கி எதாவது பலகாரம் செஞ்சி சாப்பிட்டு வந்தீங்கனா உடம்புல பலம் ஏறுறதோட சவலைப்பு‌ள்ளைங்க குண்டாகுறதுக்கு வாளிணிப்பிருக்கு.

புளியை இலையை நாம சீண்டுறதே இல்லை. அதுலயும் நிறைய மருத்துவ குணம் இருக்கு. பிடிகருணை கிழங்கை குழம்பு வைக்கும்போது அதுல உ‌ள்ள அரிப்பு சிலபேரோட கையில பட்டு ஒருவழி பண்ணிரும். கிராமத்துல கருணைக்கிழங்கை வேகவைக்கும்போது புளியை இலையையும் சேர்த்து வேக வைப்பாங்க. அதுக்கு பிறகு குழம்பு வச்சா அதுல உ‌ள்ள சொணப்பு அதுதான் ஊறல் போயிரும். பிறகு வாளிணிக்கு ருசியா சமைச்சி சாப்பிடலாம். மத்தபடி புளிய இலையையும், வேப்பிலையையுமசேர்த்து இடிச்சி தண்ணி விட்டு காளிணிச்சி புண்ணுங்களை கழுவி வந்தா எப்பேர்ப்பட்ட புண்ணும் ஆறிப்போயிரும்.

புளியையும், உப்பையும் சமஅளவு சேர்த்து அரைச்சி உ‌ள்நாக்குல தடவிட்டு வந்தா குட்டிநாக்குனு சொல்ற உ‌ள்நாக்கோட வளர்ச்சி குறைஞ்சி போயிரும். சின்னப்பசங்களுக்கு உ‌ள்நாக்கு வளர்ந்திருக்குனு சிலபேரஎன்னென்னவோ வைத்தியம் செளிணிவாங்க. இந்த வைத்தியம் இருக்கும்போது வேற யாரை தேடணும். புளியங்கொட்டை தோலபொடியாக்கி பல் வெளக்கிட்டு வந்தீங்கன்னா பல் பளிச்சினு இருக்குறதோட இறுகும்

Post a Comment

أحدث أقدم