உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு பலர் சக்தி பானம் என்று எதைஎதையோ குடித்து உடலைத் தேற்றி வருகின்றனர். ஆனால் தக்காளி ஜூஸ் அருமையான எனெர்ஜி டிரின்க் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

கடுமையாக உடற்பயிற்சி விளையாட்டு வீரர்கள் உட்பட சாதாரண மனிதர்களுக்கும் தேவைதான், ஆனால் அதன்பிறகு தேவைப்படும் எனெர்ஜியக் கொடுக்க, அதாவது இறுகிய தசைகள் ரிலாக்ஸ் ஆகவும், ரத்த ஓட்டம் மீண்டும் நார்மலாகவும் தக்காளி ஜூஸ்தான் சிறந்தது என்கிறது இந்த ஆய்வு.

மேலும்....

கிரீஸில் 15 தடகள வீரர்களை வைத்து இந்த பரிசோதனை செய்யப்பட்டதில் தக்காளி ஜூஸ் உடனடி எனெர்ஜி கொடுப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

தக்காளி ஜூஸ் குடித்தவுடன் குளூக்கோஸ் அளவு விரைவில் நார்மலடைவதை இந்த ஆய்வு கண்டு பிடித்துள்ளது.

தக்காளியில் உள்ள 'லைக்கோபீன்' என்ற ரசாயனம் அதன் சிகப்பு நிறத்தைக் கொடுக்கிறது. சிகப்பு நிறமான எதுவும் உடலுக்கு நல்லதுதான்.

வைட்டமின்கள் பல அடங்கிய தக்காளி புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற உடல் உபாதைகளை தடுக்கவல்லது.

தசை மற்றும் மூளை பழுதடைவதற்குக் காரணமாகும் சில சுரப்பிகளின் தீமையான அளவை தக்காளி ஜூஸ் குறைக்கிறது.

உடலின் நச்சுத் தன்மையை தக்காளி ஜூஸ் கடுமையாகக் குறைப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post