gkstaar.blogspot.com
     தற்போது மொபைல் சந்தையில் பரவலாக மாற்றங்களை ஏற்ப்படுத்தி வருவது
மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சலுகை தான். இதனால் சில முன்னனி நிறுவனங்கள் பெரும் இழப்பிட்டை ஏற்ற வேண்டும் என அஞ்சுகின்றன..

     இது என்ன மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சலுகை, ஒன்னும் இல்லைங்க...இனி தாங்கள் தற்போது பயன்படுத்தும் மொபைல் நம்பரை தாங்கள் விரும்பும் எந்த நெட்வொர்க்க்கும் மாற்றலாம் என்பதே! ஆனால் தங்களின் மொபைல் நம்பர் மாறாது.

     ஒரு நெட்வொர்க் ஏதேனும் சிறப்பான சலுகைகளை வழங்கும் போது நாம் அனைவரும் அந்த நெட்வொர்க்கை பயன்படுத்துவோம்..ஆனால் சில பேர்கள் பழைய நெட்வொர்க்கையே பயன்ப்படுத்துவார்கள். இதற்கு காரணம் அவரின் நம்பர் எளிதாகவும், மேலும் பலரிடமும் புலக்கத்தில் இருப்பதால் மாற முடியாத நிலையில் இருப்பர்..ஆனால் தற்போது வந்து இருக்கும்  மொபைல் நம்பர் போர்டபிலிட்டி சலுகையால் இந்த தடை நீங்கியுள்ளது.

     சில மாதங்களாக வரும் வரும் என எதிர்பார்க்கப்பட்டு, தறபோது அனைத்து நெட்வொர்கின் பங்களிப்புடன் கடந்த 20ம் தேதி இந்த சேவை தமிழகத்தில் நடைமுறைக்கு வந்தது. இனி நம் நம்பரை எந்த நெட்வொர்க்கிற்கும் மாற்றி கொள்ளலா. ஆனால் தாங்கள் ஒரு முறை இந்த சேவையை பெற்றுவிட்டால் மீண்டும் மூன்று மாதங்கள் பிறகே வேறு நெட்வொர்க்கிற்கு மாற முடியும். சரி சரி மேட்டருக்கு வருவோம் இதை எப்படி பெறுவது என...

     இந்த சலுகையை பெற தாங்கள் செய்ய வேண்டியது தங்களுக்கு அருகில் இருக்கும் நெட்வொர்க் அலுவலகம் அல்லது சந்தாகாரர்களை அதாவது இந்த சிம் கார்டுலாம் விப்பாங்கல..அங்க போய் தங்களின் ID மற்றும் போட்டோவை தந்து இந்த சலுகையை பெறலாம். இதற்காக ரூபாய் 5 பெறப்படுகிறது. மேலும் இதை ஆக்டிவேட் செய்ய ரூபாய் 50 தாங்கள் செலுத்தவேண்டும். ஆனால் தங்கள் அக்கொண்டில் 48ரூபாய் ரிசார்ஜ் செய்யப்படும். அவ்வளவு தான்..இனி தாங்கள் ஏர்டெலிருந்த் ஏர்செல் அல்லது ஏர்செல் டூ ஏர்டெல் அல்லது வோடோபோன் போன்று எந்த நெட்வொர்க்கிற்கும் மாறிகொள்ளலாம்.

     இந்த அற்புதமான சேவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் சில நெட்வொர்க் நிறுவனங்கள் இந்த சேவையை வழங்க தயங்கின. வேறுவழியில்லாமல் தற்போது இந்த சேவையை வழங்குகின்றன. இந்த சேவையால் சில முன்னணி நிறுவனங்கள் பெரும் இழப்பிட்டை எதிர்கொள்ள உள்ளன. அது அரசின் நிறுவனமாகவும் இருக்கலாம். அல்லது செல் நிறுவனமாகவும் இருக்கலாம்...இந்த சேவையில் அதிகம் பயன்பெருவது ஏர்டெல் நிறுவனமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

     இந்த பதிவு பயன்யுள்ளதாக இருந்ததா....சரி அருகில் இருக்கும் சைட்பாரில் தாங்கள் மாறவிரும்பும் நெட்வொர்க்கு வாக்கு அளிக்கவும்.

Post a Comment

Previous Post Next Post